குருகிராமில் மயங்க் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெலிவரி பார்ட்னர் உடன் பேசியதை குறித்து தனது லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னரான பங்கஜ் என்பவர் உணவை டெலிவரி செய்யும் போது அவரது 2 வயது மகளை அழைத்துக் கொண்டு வந்து உணவுகளை கொடுக்கிறார்.

அவரிடம் ஏன் குழந்தையுடன் வந்து உணவுகளை தருகிறீர்கள் என்று கேட்டதற்கு, என்னுடைய மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டார், மூத்த மகன் வகுப்புக்கு சென்று இருக்கிறார், அதனால் மகளை நான் தான் மட்டுமே பார்த்துக் கொள்வதாக கூறினார்.

இதனால் தனது மகளை தன்னுடன் அழைத்து வருவதை விட வேறு வழி இல்லை என்றும் கூறியதாக பகிர்ந்து உள்ளார். இவரது கதை இணையதளத்தில் புயலை கிளப்பியது. பலர் அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பை பாராட்டினர். அதே நேரத்தில் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க முன்வந்தனர். பயனர்கள் அவரது தொடர்பு எண்களை கேட்டு கருத்துக்களை பதிவு செய்தனர். பங்கஜின் UPI ID-ஐ பகிர்ந்து உள்ளார்.

பின்னர் அதை நீக்கிவிட்டார். அதில் அவருக்கு இப்போது எந்த நிதி உதவியும் தேவையில்லை அவருக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும், வேலை செய்ய முடியவில்லை என்றும் பங்கஜ் கூறினார். நண்பர்களே தயவு செய்து அவரை அழைக்க வேண்டாம் தனது மகளை கவனத்தில் கொள்ளும் அளவிற்கு தான் திறமையானவர் என்பதால் எந்த உதவியும் தேவையில்லை என்று கூறினார்.

தனது வீட்டில் மகள் வடிவில் லட்சுமி இருப்பதாக பங்கஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். இந்தப் பதிவை கண்ட பயனர்கள் பங்கஜை பாராட்டி வருகின்றனர்.