அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் நீரோ. இவர் காட்ஃபாதர் என்ற திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் கடந்த 1976-ம் ஆண்டு நடிகை டியான்னே அப்பாட் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். கடந்த 1988-ம் ஆண்டு தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த ராபர்ட் மாடல் அழகி ஸ்மித் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில் அடுத்ததாக கிரேஸ் ஹைடவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே 6 குழந்தைக்கு தந்தையான ராபர்ட் தற்போது தனக்கு 7-தாக ஒரு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் ராபர்ட்டுக்கு தற்போது 79 வயது ஆகும் நிலையில் தனக்கு இன்னும் குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய 7-வது குழந்தையின் தாய் யார் என்பதை சொல்ல ராபர்ட் மறுத்து விட்டார்.