
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணகசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சுதந்திரம் அடைந்து 76 வருடத்தை கொண்டாடித்துவிட்டு, 77வது வருடத்தில் இருக்கின்றோம். ஜாதி ரீதியாக, மதம் ரீதியாக, மொழி ரீதியாக பிரிப்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. இந்தியாவினுடைய ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவம், சம உரிமை நிலைநாட்ட வேண்டி பொறுப்பு ஆட்சியாளர்களிடம் உள்ளது.
எனவே மக்களுக்கு உண்டான தேவைகளை மாநில அரசுகளும் – மத்திய அரசுகளும் செய்ய தவறிவிட்டு, மீண்டும் ஜாதி ரீதியாக… உள் ஜாதி ரீதியாக போயிட்டு இருந்தா எப்படி ? ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுத்து என்ன சொல்ல வராங்க ? இதன் மூலமாக பொது மக்களுக்கு என்ன சொல்ல வராங்க ?
ஆட்சியாளர்கள் நீங்க ஆட்சியளர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டு, நீங்கள் இந்த கணக்கு கொடுப்பது மூலமாக யாருக்கு? என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? இது இந்தியாவை துண்டாட கூடியது. மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பிளவு எண்ணங்களை உருவாக்கக்கூடியது. இது தவறான ஒரு நடைமுறை. ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது, ஜாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கவில்லை என தெரிவித்தார்.