
சென்னை பெரியமேட்டில் மைலேடி மாநகராட்சி பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள நீச்சல் குளத்தில் தினமும் ஏராளமானோர் வந்து குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கொசப்பேட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் (40) என்று நபர் தனது நண்பருடன் மது போதையில் பூங்காவுக்கு சென்றுள்ளார்.
அதன் பின் அவர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சீனிவாசன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த அவரது நண்பர் சீனிவாசனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.