
பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்ததை அடுத்து கத்தியால் குத்துப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.