பெற்ற தாயின் பாசம் எல்லையற்றது என்பதை உணர்த்தும் வகையில், ஒரு பெண் தனது செல்லப் பூனைக்குச் சிறு குழந்தைக்கு ஊட்டுவது போலவே, வாயால் உணவளிக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உணவை உண்ணத் தயங்கும் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் எப்படிச் சமாதானப்படுத்தி, சிலசமயம் வற்புறுத்தியும் உணவளிப்பார்கள் என்பதைப் போலவே, இந்தப் பெண் தன் பூனையின் வாயில் உணவை வலுக்கட்டாயமாக ஊட்டுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Nithyaa (@nithya.thecat)

“>

பூனையும் அன்புடன் அதைச் சாப்பிடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. nithya.thecat என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியை 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். எனினும், ஒரு சிலர், இவ்வாறு வலுக்கட்டாயமாக உணவளிப்பது பூனையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்றும் விமர்சித்துள்ளனர். மறுபுறம், இந்தியத் தாய்களின் எல்லையற்ற பாசத்தை இது காட்டுவதாகவும் பலர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.