
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் சோழப்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விவசாய நிலத்தில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இருந்து கிடப்பதை கண்டு செல்வராஜ் அதிர்ச்சியடைந்தார்.
நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து குதறி கொன்றது தெரியவந்தது. மர்ம விலங்கு கடிப்பதால் கால்நடைகள் பரிதாபமாக உயிரிழக்கிறது. எனவே செல்வராஜுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.