சென்னை மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தினி என்பவர் விதித்து வருகிறார். இவரது மகள் அபிநயா ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சண்முகம் பூங்கா அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அபிநயாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அபிநயாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் அபிநயா இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வீடியோ எடுக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி அபிநயாவின் உடலை அவரது தாயும், உறவினர்களும் வாங்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து அபிநயா குடும்பத்தினர் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சண்முகம் பூங்கா அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.