
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஷா நவாஸ் பிரதான். இவர் மும்பையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பாலிவுட் திரை உலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ஷா நவாஸ் பிரதான் நடிகர் சைஃப் அலிகான் முக்கிய வேடத்தில் நடித்த பாந்தோம் என்ற திரைப்படத்தில் மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஹபீஸ் சயீது வேடத்தில் நடிகர் ஷாநவாஸ் நடித்திருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கூட போடப்பட்டது. மேலும் பல திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் மிர்சாபூர் என்ற வலைதள தொடர் போன்றவைகளிலும் ஷாநவாஸ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.