தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சாகுந்தலம் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் பிறகு சில மாதங்களாகவே மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் தன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் சமந்தா இன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் சமந்தா இஸ் பேக் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு தற்போது 25 கோடி ரூபாய் நஷ்டமானதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக சமந்தா படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. இதனால் நடிகை சமந்தா 12 விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாகவும் இதனால் 25 கோடி ரூபாய் வரை சமந்தாவுக்கு நஷ்டமானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் ஏற்கனவே நோயினால் பாதிப்பு அடைந்துள்ள சமந்தாவுக்கு இப்படி ஒரு நஷ்டமா என்று வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.