ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆகவே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை பார்த்து திமுக அச்சப்படுகிறது. வரும் 16ஆம் தேதிக்குள் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக  பதில் அனுப்பியுள்ளது. மக்கள் அனைவரும் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்பார்கள் என்று தெரிவித்தார்.