ரஷியாவில் அமைந்துள்ள ஒரு முன்னணி தொழில்நுட்பக் கடையில் வாடிக்கையாளர்களின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்த அதிநவீன ரோபோ ஒன்று, திடீரென வாடிக்கையாளரைத் தாக்கும் முயற்சியில் இறங்கிய நிகழ்வு உலக அளவில் பெரும் அதிர்லவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் கடட்டிற்குப் பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர், அங்குச் செயல்பட்டுக் கொண்டிருந்த சேவை ரோபோவை எதிர்பாராதவிதமாகத் தள்ளிவிட்டுள்ளார். தான் தாக்கப்பட்டதாகவோ அல்லது தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவோ அந்த ரோபோவின் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு தவறாகக் கணித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன்னைத் தள்ளிய அந்த வாடிக்கையாளரை எதிர்த்துத் தாக்குவதற்காக அந்த ரோபோ ஆக்ரோஷமாக அவரை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்றுள்ளது. சற்றும் எதிர்பாராத இந்தத் திடீர் திருப்பத்தால் அங்கே நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அறிவியல் திரைப்படங்களில் மட்டுமே காணக்கூடிய இது போன்ற ஆபத்தான காட்சிகள் நிஜ வாழ்க்கையில் அரங்கேறியது அங்கிருந்தவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

எனினும், சுதாரித்துக் கொண்ட கடை ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து அந்த ரோபோவைக் கட்டுப்படுத்தி மடக்கிப் பிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அவற்றின் செயல்பாடுகளில் மனிதக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தற்போது இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி நெட்டிசன்களிடையே தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.