இலங்கை உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், மிக நீளமான சடை முடிட் தோற்றத்துடன் பேட்டிங் செய்யக் களமிறங்கிய வீரர் ஒருவர் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறார். பேட்டிங் திறமையை விட, அவரது அசத்தலான மற்றும் வித்தியாசமான சிகையலங்காரமே இணையவாசிகளின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மைதானத்தில் அவர் விளையாடிய வித்தையை விட, அவரது நீண்ட ஜடை முடிகள் பறந்தபடியே அவர் இன்னிங்ஸை எதிர்கொண்ட விதம் பார்ப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்களால் திணறடித்து வருகின்றனர்.
If the bat doesn’t connects the ball, the hair will definitely connect 🔥🤣
Father of Chris Gayle ✅️ pic.twitter.com/R7AP195npp
— Venky Mama (@venkymama100) September 1, 2026
குறிப்பாக, இவ்வளவு நீண்ட மற்றும் அடர்த்தியான சடையைக் கிரிக்கெட் விளையாடும்போது அவர் எப்படிப் பராமரிக்கிறார் என்று பலரும் வியந்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையில், வழக்கம் போல் நெட்டிசன்கள் தங்கள் நகைச்சுவை ட்ரெண்டை வெளிப்படுத்தத் தவறவில்லை; அதில் ஒரு மீம்ஸ் கமெண்ட் பலரையும் சிரிக்க வைத்தது: “அவர் என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்றாரு?” சிலரோ, அவரது பேட்டிங்கை விட முடியின் பராமரிப்புக்கே அதிக மார்க் கொடுக்க வேண்டும் என்று கலாய்த்துத் த தள்ளி வருகின்றனர்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்ற எதிர்பாராத சுவாரசியமான தருணங்கள் எப்போதுமே ரசிகர்களை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், இந்த இலங்கை வீரர் தனது மேஜிக்கான ஹேர் ஸ்டைல் மூலம் கிரிக்கெட் உலகத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார்!
