அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் முடிவடையும் வரை, தாம் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (MLA) தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதாக இசக்கி சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இசக்கி சுப்பையா, பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், “இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரை தம்மை அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக பணியாற்ற அனுமதிக்கக் கோரி சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு உள்ளாகவே கிட்டத்தட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள் வரை தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும்