துலீப் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் வீசிய அற்புதப் பந்தில் தென் மண்டல அணியின் பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீஷன் கிளீன் போல்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடக்கு மண்டல அணிக்காகப் பந்துவீசிய குர்னூர் பிரார், தனது அபாரமான ஸ்விங் மற்றும் வேகத்தால் தென் மண்டல அணியின் முன்னணி வரிசையைச் சிதைத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

குறிப்பாக, நாராயண் ஜெகதீஷனுக்கு அவர் வீசிய பந்து லெக் ஸ்டம்பை நோக்கிச் சென்று திடீரென உள்நோக்கிச் சுழன்று ஆஃப் ஸ்டம்பைத் தெறிக்கவிட்டது. அந்த மாயாஜாலப் பந்தைச் சற்றும் எதிர்பார்க்காத ஜெகதீஷன் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்.

இந்த அற்புத விக்கெட்டின் வீடியோவைப் பிசிசிஐ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், குர்னூர் பிராரின் இந்த ஸ்விங் பந்துவீச்சு குறித்துக் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

What. A. Ball

Top of off. Stump knocked down 💥

Gurnoor Brar bowls a peach to provide an early breakthrough 🔥

Scorecard ▶️ https://t.co/AGjIStrDAT#DuleepTrophy | #SZvNZ pic.twitter.com/L53gUYbfdM

— BCCI Domestic (@BCCIdomestic) August 31, 2026

“>

இந்திய ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி சிறப்பாகச் செயல்பட்டுள்ள 26 வயதான குர்னூர் பிரார், தனது வேகம் மற்றும் பவுன்ஸ் மூலம் இந்திய அணியின் அடுத்த முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வருகிறார்.