மாறும்போது என்ன மாதிரியான விபரீதங்கள் நடக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பட்டப்பகலில் ஒரு இளைஞன் கடுமையான கோபத்துடன் கையில் பெரிய கட்டிங் பிளேயரை பிடித்துக்கொண்டு, மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரக் கம்பத்தின் உச்சியில் ஏறியுள்ளார். மின் கம்பத்தின் உச்சியில் மிக ஆபத்தான முறையில் அமர்ந்துகொண்டு, ஒவ்வொன்றாக மின்சார ஒயர்களை வெட்டத் தொடங்கியுள்ளார்.

​இந்த அதிர்ச்சி சம்பவத்துக்குப் பின்னால் இருந்த காரணம் தான் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. அந்த இளைஞனின் காதலிக்கு போன் செய்தபோது, தொடர்ந்து “பிஸி” என்றே வந்துகொண்டிருந்துள்ளது. இதனால் மிகுந்த ஆத்திரமும் பொறாமையும் அடைந்த அந்த காதலன், தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நேரடியாக மின்சாரக் கம்பத்தில் ஏறி முழு ஊரின் மின் இணைப்பையும் துண்டிக்கும் விபரீதச் செயலில் இறங்கியுள்ளார்.

​மின்சார ஒயர்கள் ஒவ்வொன்றாகத் துண்டிக்கப்பட்டதால், அந்த கிராமம் முழுவதுமே நொடிப் பொழுதில் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பத்தின் உச்சிக்குச் சென்று மின்சார ஒயர்களை வெட்டிய இவனது செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது. காதலன் எடுத்த இந்த அதி தீவிரமான முடிவு, அப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான மின் தடையை உண்டாக்கியது.

​சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் இதைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட, இந்த விபரீதச் செயல் உடனடியாக இணையத்தில் வைரல் மீம்ஸாக மாறியது. “தெரே நாம் 2.0” பாணியிலான பின்னணி இசைகளுடனும், காதலனின் இந்த லெவல் இல்லாத பழிவாங்கும் படலத்தைக் கிண்டல் செய்யும் வீடியோக்களுடனும் நெட்டிசன்கள் இணையத்தை அலறவிட்டு வருகின்றனர்.

​இணையத்தில் இந்த வீடியோவைப் பார்க்கும் மக்கள், இவனை பைத்தியக்காரன் என்று சொல்வதா அல்லது தீவிரமான காதலன் என்று சொல்வதா என்று தெரியாமல் குழம்பிப்போய் கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ, காதலர்களுக்கிடையே வந்த ஒரு சாதாரண சண்டை, ஊருக்கே வெளிச்சம் இல்லாமல் போயி மிகப்பெரிய மின் தடையாக மாறிய சம்பவம் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் தீயாய் பரவி வருகிறது.