மூத்த திரைப்படக் கலைஞரும், சமூக சேவகருமான செளகார் ஜானகியின் மறைவு திரையுலகினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்காலச் சூழலைத் தாண்டி, தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், திரையில் வெளிப்படுத்திய நேர்த்தியான ஆளுமையாலும் பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் செளகார் ஜானகி.

இவரது மறைவு இந்தியத் திரைப்படத் துறைக்கும், இவரை நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எவராலும் நிரப்ப முடியாத ஒரு பெரிய இழப்பாகும்

. துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகக் கலைஞர்களுக்கும் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“>

 

அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி என K. அண்ணாமலை அவர்கள் அவரது (x) எக்ஸ் தளத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.