காட்டுப்பகுதிகள் வழியாகச் செல்லும் இரயில் பாதைகளில், தண்டவாளங்களைக் கடக்க முயலும் வனவிலங்குகள் இரயிலில் மோதி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, யானைக் கூட்டங்கள் தண்டவாளத்தைக் கடக்கும் போது நிகழும் விபத்துகள் வன ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

இந்நிலையில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் கூட்டத்தை அதிவேகமாக வந்த இரயிலில் இருந்து காப்பாற்ற ஒரு நபர் காட்டிய சமயோசித புத்தியும் துணிச்சலும் தற்போது இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.

இரயில் தண்டவாளத்தைக் கடப்பதற்காக யானைக் கூட்டம் ஒன்று வந்துகொண்டிருந்த வேளையில், அதே தண்டவாளத்தில் அதிவேகமாக இரயில் ஒன்றும் வந்துகொண்டிருந்தது. இதை கவனித்த அந்த நபர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று, இரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை சமிக்ஞை அளித்துள்ளார்.

ஓட்டுநரும் நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு உடனடியாக அவசர காலத் தடையை பயன்படுத்தி இரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் சில அடி தூரத்திற்கு முன்னதாகவே இரயில் நிறுத்தப்பட்டு, யானைக் கூட்டம் எவ்வித ஆபத்தும் இன்றி பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்து சென்றது.

அந்த நபர் ஆற்றிய இந்த அபாரமான மற்றும் சாதுரியமான செயலால் மிகப்பெரிய வனவிலங்கு பேரழிவு தடுக்கப்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சியான மற்றும் விறுவிறுப்பான தருணங்கள் அனைத்தும் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பிரபலங்கள் அந்த நபரின் சமயோசித புத்தியையும், உயிரினங்கள் மீதான அவருடைய கருணையையும் பாராட்டி வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். மனிதநேயமும் வனவிலங்கு பாதுகாப்பும் ஒருங்கிணைந்த இந்தச் சம்பவம், இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தீயாய் பரவி வருகிறது.

“>