பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, ‘துரந்தர்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகை ஆயிஷா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

மேலும் வெள்ளை நிற உடையில், கையில் பெரிய வைர மோதிரத்தை அணிந்துகொண்டு, முகம் தெரியாத ஒரு நபருடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் காட்டுத்தீயாகப் பரவின. “ஒரு கனவு” என்ற ஒற்றை வரிக் கேப்ஷனுடன் அவர் இந்தப் படங்களை வெளியிட்டதால், ஆயிஷா கானுக்கு இரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைக் குவிக்கத் தொடங்கினர்.

ஆனால், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த நிச்சயதார்த்த செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மை வேறு என்பதும் தெரியவந்துள்ளது. ஆயிஷா கான் தரப்பிலிருந்தோ அல்லது அவரிடமிருந்தோ நிச்சயதார்த்தம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஒரு பிரபல நகை விளம்பரத்திற்கான பிரத்யேகப் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விளம்பரத்திற்காக வடிவமைக்கப்பட்ட அந்த ரொமாண்டிக் சூழலையும் வைர மோதிரத்தையும் பார்த்த ரசிகர்கள், அது நிஜமான நிச்சயதார்த்தம் எனத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் புகைப்படங்கள் இதுபோன்ற சர்ச்சைகளையும் வதந்திகளையும் உருவாக்குவது புதிதல்ல என்றாலும், ஆயிஷா கானின் இந்தப் போஸ்ட் இணையத்தில் வைரல் கன்டென்ட்டாக மாறியுள்ளது.

இதனால் உண்மை நிலை அறியாமல் வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள், தற்போது இது வெறும் விளம்பரப் படப்பிடிப்புதான் என்பதை அறிந்து சற்று ஏமாற்றமும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். எது எப்படியோ, ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் தன் பக்கம் திரும்ப வைத்துவிட்டார் ஆயிஷா கான்.