உணவு என்பது மனித உயிரைக் காக்கும் அமுதமாக இருக்க வேண்டிய சூழலில், அதே உணவு ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்கும் நஞ்சாக மாறிய கொடூர சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலில் இருந்து ஆசையாக ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்ட ‘காஜு பனீர்’ உணவை உண்ட ஐந்து வயது சிறுமி, அடுத்த பதினைந்தே நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்த துயரம் அனைவரின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது.
அதோடு நில்லாமல், அதே உணவை உண்ட குடும்பத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் கடுமையான நச்சு பாதிப்புக்கு உள்ளாகி, தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் மாபெரும் சோக அலையை உருவாக்கியுள்ளது.
வெளி உணவகங்களில் தயாராகும் உணவுகளின் தரம் மற்றும் தூய்மை குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் பூதாகரமாக எழுப்பியுள்ளது. மாலையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உணவு அருந்தலாம் என நினைத்த அந்த எளிய குடும்பத்தின் கனவு, சில நிமிடங்களிலேயே மாபெரும் துயரமாக மாறியுள்ளது.
உணவை உண்ட சிறிது நேரத்திலேயே அந்தச் சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு விரைவதற்குள்ளாகவே, அந்தச் சின்னஞ்சிறு உயிரின் மூச்சுக்காற்று நின்றுபோனது காண்போரை உரைய வைத்துள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஹோட்டலில் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், குறிப்பாகக் கெட்டுப்போன பனீர் அல்லது காஜு ஆகியவற்றில் கலக்கப்பட்ட ரசாயனங்கள் தான் இந்த நச்சுத்தன்மைக்குக் காரணமா என்ற கோணத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற உணவகங்களின் அலட்சியப் போக்கிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#WATCH | Surat, Gujarat: Restaurant shut by Health Department as one child dies, three others hospitalised in suspected food poisoning.
Food Safety Officer, SMC, Sejal Vyas says, “Our team arrived here early this morning in response to a complaint regarding food poisoning. We… pic.twitter.com/Sal9t9tOmu
— ANI (@ANI) August 18, 2026
“>
