“திருமாவளவன் பிடிகொடுக்காமல் நின்றதால், பாமகவை உள்ளே இழுத்து தவெக கூட்டணியை பெரிதாக்கலாம் என்று போட்ட கணக்கு மொத்தமாக நொறுங்கிவிட்டது!” – தவெக கூட்டணியை விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக உறுதி செய்ததை அடுத்து, பாமக முகாமில் கடும் அதிருப்தியும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.
”தகைசால் விருது அறிவிப்பெல்லாம் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சிதான் என பேசப்பட்ட நிலையில், இதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த திருமாவளவன், சட்டென தவெக கூட்டணியை வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இதனால் தவெக கூட்டணியில் இணைந்து சௌமியா அன்புமணியை அமைச்சராக்கி அழகு பார்க்க நினைத்த பாமகவின் ஆசை தவிடுபொடியாகிவிட்டது,” என அரசியல் வட்டாரத்தில் சுடச்சுட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
”விசிகவின் இந்த அதிரடி மூவ் காரணமாக, தவெக – பாமக கூட்டணி அமைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் கனவில் இருந்த பாமக தலைவர்கள் கடும் அப்செட்டில் உறைந்துபோய் உள்ளனர்!” என பரவும் இந்த அரசியல் கிசுகிசு, தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.
