கோவை பகுதியில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது இரு தரப்பு மோதல் என அரசு தரப்பு அவசரமாக முத்திரை குத்துவது ஏன் என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. விடுதியில் கஞ்சா விற்பவர்கள் யார் என்று பெயரைக் கூறினால் மீண்டும் உன்னை விடுதியில் சேர்த்துக்கொள்கிறோம் என்று கூறியவர்கள், அமுதன் கொடுத்த ரகசியப் பட்டியலை லீக் செய்துள்ளனர். தன் மகனை நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டதாகக் கதறும் தந்தை, தன் மகன் கஞ்சா வியாபாரிகளைக் காட்டிக் கொடுத்ததே அவனது படுகொலைக்குக் காரணம் எனத் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10-ஆம் தேதி காலை குடும்பத்தினரிடம் பேசிவிட்டுக் கல்லூரிக்குச் சென்ற அமுதனை, சுமார் இருபது பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்து இரும்பு கம்பிகள் மற்றும் கட்டைகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. வலிப்பு ஏற்பட்டுத் துடிக்கும் அளவுக்குத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.
ஒரு தனி மனிதனை இருபது பேர் கொண்ட கும்பல் ஒன்று சேர்ந்து சுற்றிவளைத்துக் கொடூரமாகத் தாக்குவதை எப்படி ‘இரு தரப்பு மோதல்’ என்று கூற முடியும்? ‘செல்போன் பறிப்பு’ என்பது இந்த கொலையை மூடி மறைக்கக் கல்லூரி நிர்வாகமும் குற்றவாளிகளும் புனைந்த ஒரு நாடகமே தவிர வேறில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.
கோவையில் கொல்லப்பட்ட இளைஞர் அமுதனின் தந்தை “‘ஹாஸ்டல்ல யாரெல்லாம் கஞ்சா விக்கிறாங்கன்னு சொன்னா, திரும்பவும் ஹாஸ்டல்ல சேத்துக்குறோம்’னு சொன்னாங்க. அதனால, என் பையன், சம்பந்தப்பட்டவங்க பேரையெல்லாம் சொல்லிட்டான். ‘இதை ரகசியமா வெச்சுப்போம். உனக்கு எந்தப் பிரச்னையும் வராது’ன்னு… pic.twitter.com/OhXORTK2nG
— Raam (@RaamShankar1752) August 17, 2026
“>
இந்த விவகாரத்தில் முறையான தடயவியல் மற்றும் காவல்துறையின் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, உயர்கல்த்துறை அமைச்சர் அவசரமயமாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், “இது ஒரு குழு மோதல்தான்; இதற்கும் போதைப்பொருளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அடித்துக் கூறுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. கல்லூரிக்குக் கெட்ட பெயர் வராமல் இருக்கவும், உண்மையை மறைக்கவும் ஆட்சியாளர்கள் முந்திக் கொண்டு தீர்ப்பை எழுதுவது நியாயமான விசாரணையைச் சந்தேகிக்க வைக்கிறது.
