தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை முறையாக அழைப்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்தும், திமுக மீதான எதிர்ப்புக் கொள்கையில் சமரசம் செய்யக்கூடாது என்றும் தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் எச்சரிக்கைகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டமன்றத்தில் இருந்த காலகட்டத்தில், எதிர்ப்புக் கட்சிகளை எப்படி எதிர்கொண்டாரோ அதே பாணியில் தவெக தலைமையும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் இதுதொடர்பான உண்மையான நிலையை முதல்வர் விஜய்க்குத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக மீதான மென்மைப் போக்கு அல்லது மறைமுகப் பிடிப்பு முதல்வர் விஜய்யின் மீதான நற்பெயரைக் கெடுத்துவிடக் கூடாது என்றும், திமுக எதிர்ப்பு வாக்குகளை தவெக இழப்பது இறுதியில் திமுகவுக்கே லாபமாக முடியும் என்றும் அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். திமுக எதிர்ப்பு என்பது அக்கட்சியின் முதன்மைக் குடும்பத்தின் மீதான எதிர்ப்பை மையமாகக் கொண்டது என்பதை நினைவூட்டியுள்ளனர்.

“>

 

திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைச் கொள்கையை நம்பி தவெகவில் இணைந்த லட்சக்கணக்கான தொண்டர்களை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால், கட்சித் தலைமை தனது அரசியல் நகர்வுகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற குரல்கள் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.