தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய சுவாரஸ்யமான கருத்துகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து அவர் வெளிப்படுத்திய கவலைகள் தற்போது அரசியல் அரங்கில் பெரும் சிரிப்பலையையும், சமூக வலைதளங்களில் வைரல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
காலை 9:30 மணிக்குத் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் பிற்பகல் 3:30 மணிக்குத் தனது உரையைத் தொடங்கி மாலை 3:52 வரை தொடர்ந்து பேசினார். மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்களில் துறை சார்ந்த முக்கிய அம்சங்கள் பேசப்பட்டாலும், நீண்ட நேர விவாதங்களால் அவையில் சோர்வு ஏற்பட்டது.நீண்ட நேரம் நடந்த இந்த விவாதத்தின் இடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேசுகையில், மானியக் கோரிக்கைகள் குறித்துத் துறை அமைச்சர்கள் சுருக்கமாகப் பேசினால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
சுகர் இருக்க சமாளிக்க முடியவில்லை – ஓ பன்னீர் செல்வம்
காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டமன்ற கூட்டம்
மருத்துவத்துறை அமைச்சர் 3:30 மணிக்கு பேச தொடங்கி 3:52 ஆகிவிட்டது.
மானிய கோரிக்கை தொடர்பாக பேசினால் நன்றாக இருக்கும்
நிறைய பேருக்கு சுகர் உள்ளது. சமாளிக்க முடியவில்லை.
மயங்கி… pic.twitter.com/pbYAyQFVps
— Manikandan Sankar (@reportermani) August 17, 2026
“>
அப்போது தனது உடல்நிலையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “இன்றைக்குப் பலருக்கும் சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது; என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். நீண்ட நேரம் பேசும்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழும் நிலை உருவாகிறது, அந்த அளவிற்குத் தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது” என்று நகைச்சுவை கலந்த பாணியில் தனது சிரமத்தைப் பகிர்ந்து கொண்டது அவையில் இருந்த அனைவரையும் சிரிக்கச் செய்தது.
