சமூக வலைத்தளங்கள் மற்றும் உடனடி செய்திப் பரிமாற்ற செயலிகளில் எப்போதுமே பரபரப்புக்குப் பஞ்சமிருப்பதில்லை. அதில் குறிப்பாக, தனிப்பட்ட நபர்களின் பெயர்களைக் களங்கப்படுத்தும் வகையிலும், திடுக்கிடும் தலைப்புகளுடனும் பகிரப்படும் சில வீடியோக்கள் பலரின் கவனத்தை ஈர்ப்பதுண்டு. அப்படித்தான் சமீப காலமாக ‘ஆசிரியர்-மாணவர் லீக்’ , ‘5:40 நிமிட MMS ஊழல்’, மற்றும் ’30 நிமிடம் 04 வினாடிகள் கொண்ட வீடியோ’ போன்ற அதிர்ச்சியூட்டும் மற்றும் சஞ்சலத்தை ஏற்படுத்தும் தலைப்புகளுடன் ஒரு காணொளி இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரு பள்ளியில் நடந்ததாகக் கூறப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இது உண்மையான ஒரு தனிப்பட்ட சம்பவத்தின் லீக் என்று நம்பி அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உண்மை என்னவென்றால், இது எந்தவொரு வகுப்பறையிலும் நடந்த நிஜமான சம்பவமோ அல்லது ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோவோ கிடையாது என்பதே நிபுணர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரபல ஊடகமான ‘டெய்லி பாகிஸ்தான்’ (Daily Pakistan) வெளியிட்ட தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆய்வுகளின்படி, இந்த வைரல் வீடியோவின் பின்னணி முற்றிலும் வேறுபட்டது. அந்த வீடியோவை உற்று நோக்கினால், அதில் பிரபல வணிகரீதியான வயது வந்தோருக்கான இணையதளம் ஒன்றின் வாட்டர்மார்க் மிகத் தெளிவாகப் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்தத் தளம் தொடர்பான டொமைன் பதிவுகளை ஆராய்ந்தபோது, அது 2023-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் பிளாட்ஃபார்ம் மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
சமூக வலைத்தளங்களில் தங்களது பக்கங்களுக்கு அதிக அளவில் பார்வைகளையும் கிளிக்குகளையும் அள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, இதுபோன்ற பழைய அல்லது வேறு தளங்களில் உள்ள உள்ளடக்கங்களை எடுத்துத் தவறான மற்றும் விகாரமான தலைப்புகளைச் சூட்டி பதிவேற்றம் ( செய்கின்றனர். மக்களின் அறியாமையையும், விறுவிறுப்பான செய்திகளைத் தேடும் மனநிலையையும் மூலதனமாக மாற்றி இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.
