ஓசூர் அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து வெளியூரில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், துறைசார்ந்த தொழில்துறை அமைச்சரே அதுபற்றித் தெரியாமல் இருப்பது மற்றும் ஆதாரம் கேட்பது போன்ற நடவடிக்கைகள் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக அரசுகள் ஓசூர் எல்லைப் பகுதிகளில் விமான நிலையங்களை அமைப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சூழலில், நமது மாநில அரசு தரப்பில் அதுகுறித்த எந்தப் பார்வையும் இல்லாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் முதலீடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கையில் வைத்துள்ள முக்கிய அமைச்சரே இதுபற்றிய தகவல்கள் எதுவும் தனக்குத் தெரியாது என்று கூறுவதும், அதற்கான ஆதாரத்தைக் கேட்பதும் நம்ப முடியாததாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“>

 

அண்டை மாநிலங்கள் வேகமாகச் செயல்பட்டு ஓசூர் பகுதியைச் சுற்றியுள்ள முதலீடுகளைக் குறிவைத்து முன்னேறிச் செல்லும் வேளையில், அரசின் மெத்தனப்போக்கு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும் எனத் தொழில் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.