உடல் எடையைக் குறைப்பது என்பது பலரும் நினைப்பது போலக் கடினமான காரியம் அல்ல. சந்தையில் எண்ணற்ற உணவுப் பழக்கங்களும் உடற்பயிற்சித் திட்டங்களும் இருந்தாலும், உங்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதே சிறந்த பயிற்சி முறை ஆகும். உடற்பயிற்சியைத் தண்டனையாக மாற்றாமல், சீராகப் பின்பற்றுவதே எடை குறைப்பிற்கு மிக முக்கியமாகும்.
ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சரான ஷாவி ஜெயின், ஒரே ஆண்டில் 35 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ளார். தனது இந்த எடை குறைப்புப் பயணத்தில், தேவையில்லாத 6 விஷயங்களை தான் முற்றிலுமாகத் தவிர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். விஷயங்களை மிக எளிமையாக வைத்திருந்ததே தனது வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் தவிர்த்த முதல் விஷயம், ‘வயிற்றுத் தசைகளுக்கான தனிப் பயிற்சி நாள்’ தான். கலோரிகளை எரித்து ஒட்டுமொத்த உடல் கொழுப்பைக் குறைப்பதே முக்கியம் என்பதால், க்ரஞ்ச் பயிற்சிகளுக்குப் பதிலாக ஸ்குவாட், டெட்லிஃப்ட் போன்ற பயிற்சிகளையே செய்தார். இரண்டாவதாக, உடற்பயிற்சிக்கு முந்தைய செயற்கை பானங்கள் மற்றும் கொழுப்பு எரிப்பான்களைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையிலேயே பயிற்சி செய்தார்.
மூன்றாவதாக, தனக்குப் பிடிக்காத பர்பீஸ் மற்றும் லஞ்சஸ் போன்ற பயிற்சிகளைக் கட்டாயப்படுத்திச் செய்யாமல், பிடித்த பயிற்சிகளை மட்டுமே செய்தார். நான்காவதாக, தினமும் தீவிரமாகப் பயிற்சி செய்யாமல், எளிய பயிற்சிகளோடு சமநிலைப்படுத்தினார். ஐந்தாவதாக, எந்தத் திட்டமும் இல்லாமல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதைத் தவிர்த்து, வாரத்தின் தொடக்கத்திலேயே பயிற்சிகளைத் திட்டமிட்டார்.
View this post on Instagram
“>
ஆறாவதாக, வாரத்திற்கு 1 கிலோ எடை குறைந்தபோதிலும், அதை மற்றவர்களிடம் தற்பெருமையாகப் பேசாமல் இரகசியமாக வைத்திருந்தார். கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல், பிடிவாதமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டதே 35 கிலோ எடையைக் குறைக்க அவருக்கு உதவியுள்ளது.
