சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றான ‘கயல்’ தொடரின் நாயகி சைத்ரா ரெட்டி குறித்த விவாகரத்து செய்தி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளதே இந்த செய்திக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியல், இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கிராமியப் பெண்ணாக, குடும்பத்துக்காக உழைக்கும் ‘கயல்’ கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி. இதற்கு முன்பு ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் மிரட்டலான வில்லியாக நடித்து முத்திரை பதித்தவர் இவர். சீரியல்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வரும் சைத்ரா, தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பான விவாதப் பொருளாகியுள்ளார்.
தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சைத்ரா, தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இவர்களின் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
இந்த நிலையில், அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் ராகேஷ் உடன் எடுத்துக் கொண்ட திருமண புகைப்படங்கள் மற்றும் ஜோடிப் புகைப்படங்களை அதிரடியாக நீக்கியுள்ளார். இதுதவிர, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவாகரத்து பெறப் போவதாகவும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
மேலும் பொதுவாகவே விவாகரத்து செய்யும் பிரபலங்கள் தங்கள் கணவருடன் எடுத்த போட்டோக்களை டெலிட் செய்வது வழக்கமாகி வரும் நிலையில் அதன் பின்னரே அவர்கள் தங்கள் உறவு பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிடுகின்றனர். அந்த வகையில் தற்போது சைத்ரா ரெட்டியும் போட்டோக்களை நீக்கி உள்ளதால் விவாகரத்து செய்யப் போகிறார் என்ற தகவல் வலுத்து வருகிறது.
பிரபலங்களின் விவாகரத்துச் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் சூழலில், சைத்ரா ரெட்டியின் இந்த அதிரடி மாற்றம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து சைத்ரா ரெட்டியோ அல்லது அவரது கணவரோ தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. ரசிகர்கள் மத்தியில் நிலவும் இந்த குழப்பத்திற்கு நடிகை சைத்ரா ரெட்டி விரைவில் முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
