பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் வாராந்திர உணவுப் பட்டியலில் ‘சிக்கன் பிரியாணி’யைச் சேர்க்க வேண்டும் என்ற தமிழக கல்வித்துறை அமைச்சரின் திட்டத்திற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கல்வித்துறையின் முக்கியக் கவனம் மாணவர்களின் கல்வித் தரம், பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கியே இருக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற சமையல் அலங்காரங்களில் கவனம் செலுத்துவது தேவையற்றது என்று பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து வெளியாகியுள்ள கருத்துக்களின் முக்கிய விவரங்கள் பள்ளிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மதிய உணவுகள் எந்தளவுக்குச் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றன என்பதை முதலில் அரசு உறுதி செய்ய வேண்டும். தரமற்ற சமையல் மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாத மூலப்பொருட்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வெளிவரும் சூழலில், பிரியாணி போன்ற திட்டங்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும் என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் ஆடி மாதம் அல்லது மார்கழி போன்ற புனித மாதங்களில் பெரும்பாலானோர் அசைவத்தைத் தவிர்ப்பது வழக்கம்.

இத்தகைய சூழலில், அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமான முறையில் அசைவ உணவை அறிமுகப்படுத்துவது கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளைக் கொண்ட மாணவர்களிடையே சிரமத்தை ஏற்படுத்தலாம்.

மதிய உணவுத் திட்டம் என்பது வகுப்பறைகளில் மாணவர்களின் பசியைப் போக்கவும், வருகையைப்ை பெருக்கவும் மட்டுமே உருவாக்கப்பட்டது. அதைத் தாண்டி கற்றல் இடைவெளிகளைக் குறைத்தல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில்தான் கல்வித்துறையின் ஆற்றல் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“>

 

மாணவர்களின் ஆரோக்கியம், கல்வி எதிர்காலம் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் அரசு தனது கொள்கைகளை மறுப பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.