மும்பையில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் கீர்த்தி, தனது காதலர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தி, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சுமந்த் என்பவரை கடந்த எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

சாய் சுமந்தின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயித்ததை அறிந்து மிகுந்த மனமுடைந்த கீர்த்தி, கடந்த ஜூலை 14-ம் தேதி தான் தங்கியிருந்த விடுதியில் இந்தத் துயர முடிவை எடுத்துள்ளார்.

தனது குடும்பத்தாருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், தனது இறுதிச்சடங்கை காதலனின் சொந்த ஊரிலேயே நடத்த வேண்டும் என்றும், தனது உடலில் தாலியைக் கட்டிச் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தனது கடைசி விருப்பத்தைப் பதிவு செய்துள்ளார்.