மத்திய அரசாங்கம் சார்பில் வருடம் தோறும் தேசிய விருதுகள் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 72 வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். கேப்டன் மில்லர் படத்திற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கார்த்தியின் நடிப்பில் உருவான மெய்யழகன் திரைப்படத்திற்கு சிறந்த ஒலி கலவைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமரன் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதினை இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் பெறுகிறார். ஏற்கனவே சூரரைப் போற்று படத்திற்காக அவர் தேசிய விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.