“ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்ட  பவுன்ஸர்ல என் பையன் அவுட் ஆனதை நெட்டிசன்கள் எல்லாரும் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க, ஆனா நான் சும்மா இருக்க மாட்டேன், அவனோட இந்த பலவீனத்தை மாத்த தினமும் 1000 பவுன்ஸர் பால் போட்டு என் பையனை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனா மாத்துவேன்!”

என்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஷார்ட் பால் வீச்சுகளுக்கு எதிராகத் திணறி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட 15 வயது இளம் கிரிக்கெட் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை தனது மகனின் கரியரை மீட்டெடுக்க அதிரடியான சபதம் எடுத்துள்ளார்.

சமீபத்திய தொடரில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிவேக பவுன்ஸர்களைச் சமாளிக்க முடியாமல் வைபவ் சொற்ப ரன்களில் அவுட்டாகி அணியை விட்டு நீக்கப்பட்டது அவரது தந்தைக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு மைதானத்திலேயே நெத்தியடி பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ள அவர், தனது மகனின் பேட்டிங் பலவீனத்தை முற்றிலும் ஒழித்துக்கட்ட தினமும் 1,000 ஷார்ட் டெலிவரிகளை வீசி வைபவ்வுக்கு வெறித்தனமான பிளான் போட்டு பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகனின் கிரிக்கெட் கனவுக்காக ஒரு தந்தையாக அவர் எடுத்துள்ள இந்த அசாத்திய முயற்சியும், சல்யூட் அடிக்க வைக்கும் அர்ப்பணிப்பும் தற்போது சோசியல் மீடியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் மாபெரும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.