பெண் ஒருவர் தனது ஐந்தாவது திருமண நாளைக் கொண்டாட நினைத்து, வீட்டில் அலங்காரங்கள் செய்து தனது தோழிகளை வரவைத்திருந்தார். கொண்டாட்டத்தின் போது, தனது கணவருக்கு கேக் ஊட்டுவது போன்று பாவனை செய்தார்; ஆனால், கணவருக்கு ஊட்டவில்லை.

​பலமுறை முயற்சித்தும் மனைவி தனக்கு ஊட்டாத ஆத்திரத்தில், கோபமடைந்த கணவர் மனைவியின் கையில் இருந்த கேக்கைத் தட்டிவிட்டு, அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அனைத்தையும் கோபத்தில் சேதப்படுத்தினார். அதோடு, விருந்தினர்கள் கொடுத்த பரிசையும் வாங்க மறுத்து அமைதியாக அமர்ந்துவிட்டார்.

கணவரின் இந்தக் கோபம் நிறைந்த காணொளி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலான நிலையில், நெட்டிசன்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து, ஒரு தரப்பினர் மனைவிக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் கணவனுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.