தமிழகத்தின் முதலமைச்சரான விஜய் அவர்கள், சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, “யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்காதீர்கள். இது உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க மகன், உங்க விஜய், உங்க விஜியோட ஆட்சின்னு சொல்லுங்க. அதையும் மீறி யாராவது லஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க,” என்று கூறிப் பேசியிருந்தார்.

​இந்நிலையில், இளைஞர் ஒருவர் பீர் வாங்குவதற்காக டாஸ்மாக் சென்றுள்ளார். அங்கு அவரிடம் 10 ரூபாய் கூலிங்காக அதிகமாகக் கேட்கப்பட்டுள்ளது. இதனால் டென்ஷனான இளைஞர், அதனை காணொளியாகப் பதிவு செய்து, முதலமைச்சர் அவர்களைக் குறிப்பிட்டு, “இவர் என்னிடம் கூலிங் பீருக்கு கூடுதலாக ₹10 கேட்கிறார்” என்று குற்றம் சுமத்திக் காணொளி வெளியிட்டுள்ளார்.

இந்தக் காணொளி தற்போது வைரலான நிலையில், “கூலிங் பீருக்கு ₹10 கூடுதல் வாங்குவதும் தற்போது லஞ்சப் பட்டியலில் சேர்ந்துவிட்டது” என்று நெட்டிசன்கள் வேடிக்கையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.