பிரின்ஸ்.. உடனே கிரவுண்டுக்குள்ள ஓடிப் போய் கில்லுகிட்ட சொல்லுபா, ஹாரி புரூக் கிரீஸுக்கு வந்துட்டான்.. இப்பவே பும்ராவை அட்டாக்ல கொண்டு வரச் சொல்லு, அவனால மட்டும்தான் இவனை காலி பண்ண முடியும்!” என்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் டக்அவுட்டில் இருந்து சப்ஸ்டிடியூட் வீரர் பிரின்ஸ் யாதவ் மூலமாக அனுப்பிய அந்த ஒற்றை ரகசிய மெசேஜ், ஆட்டத்தின் போக்கையே மாற்றி இந்திய ரசிகர்களை உச்சக்கட்ட குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் பேட்டிங் செய்ய களம் புகுந்த அடுத்த கணமே, கௌதம் கம்பீர் தனது மாஸ்டர் பிளானை அரங்கேற்றினார்; பயிற்சியாளரின் சிக்னலைப் பெற்ற கேப்டன் சுப்மன் கில், சிறிதும் தாமதிக்காமல் அடுத்த ஓவரிலேயே பந்துவீசும் பொறுப்பை இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் ஒப்படைத்தார்.

“>

அவ்வளவுதான், கேப்டனும் கோச்சும் தன் மீது வைத்த நம்பிக்கையை நூறு சதவீதம் காப்பாற்றும் வகையில், பும்ரா வீசிய அந்த ஓவரின்  முதல் பந்திலேயே ஹாரி புரூக் க்ளீன் போல்டாகி பெவிலியன் நோக்கி நடக்க, மைதானமே இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது;

கம்பீரின் இந்த துல்லியமான வியூகமும், பும்ராவின் அந்த  யார்க்கர் விக்கெட்டும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பிரம்மிக்க வைத்துள்ளதுடன், கம்பீரின் ‘கிரிக்கெட் மூளை’ எவ்வளவு ஷார்ப்பாக வேலை செய்கிறது என்பதற்கு இந்த விக்கெட் தான்  சாட்சி என்று சோசியல் மீடியாவில் வீடியோக்கள்  பரவி வருகின்றன.