“ஏய் கில்லு.. மெதுவா நடந்து வராத, சீக்கிரம் ஓடி வாப்பா! கேப்டன் வராம நம்ம எப்படி இங்கிலாந்து பிளேயர்ஸ்க்கு கை கொடுக்க முடியும்?” என்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, மைதானத்தில் நின்றிருந்த இந்திய வீரர்களைக் கைகுலுக்க விடாமல் தடுத்து நிறுத்தி, கேப்டன் சுப்மன் கில்லுக்காக விராட் கோலி காட்டிய அந்தப் பெருந்தன்மையான பண்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களையும் உருக வைத்துள்ளது.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம்; அப்போது இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து வீரர்களை நோக்கி நகர முற்பட்ட போது, முன்னாள் கேப்டனான விராட் கோலி, அணியின் தற்போதைய கேப்டன் சுப்மன் கில் இன்னும் மைதானத்தின் மறுமுனையில் இருந்து நடந்து வந்து கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.

உடனடியாக மற்ற வீரர்களை அப்படியே அங்கேயே நிற்குமாறு சைகை காட்டி தடுத்த கோலி, கில்லை நோக்கி “சீக்கிரம் ஓடி வா” என்று குரல் கொடுத்துள்ளார்; கில் ஓடி வந்து அணியின் முன்னால் நின்ற பிறகே, கேப்டனுக்குப் பின்னால் மற்ற இந்திய வீரர்கள் அணிவகுத்துச் சென்று இங்கிலாந்து வீரர்களுக்குக் கைகுலுக்கினர்.

“>

சீனியர், ஜூனியர் என்ற ஈகோ எதையும் பார்க்காமல், களத்தில் அணியின் கேப்டனுக்குக் கொடுக்க வேண்டிய அசல் மரியாதையை விராட் கோலி முன்னின்று நடத்திக் காட்டிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்  பரவி வருவதுடன், கோலியின் இந்த  குணம் தான் உண்மையான விளையாட்டுத் தர்மம் என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.