சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் நட்பு உலகறிந்த ஒன்று என்ற போதிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக மைதானத்தில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக்கை எட்டி  செல்லமாக உதைத்த சம்பவம் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரோஹித் சர்மா ஆடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்தபோது, எல்லைக்கோட்டில் வர்ணனையாளராக நின்றிருந்த தினேஷ் கார்த்திக் அவருக்குக் கைகுலுக்கச் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரோஹித் சர்மா வேடிக்கையாகத் தினேஷ் கார்த்திக்கை எட்டி உதைக்க, இருவரும் சிரிக்கப் பேசிக்கொண்ட சம்பவம் கலகலப்பை ஏற்படுத்துள்ளது. இந்த ஜாலியான சந்திப்பிற்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்த கேப்டன் ரோஹித் சர்மா, 21 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து சாம் கரன் பந்துவீச்சில் ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி ரசிகர்களை உறைந்து போக வைத்துள்ளார்.

 

“>

இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டியுள்ளார். 2027 ஒரு நாள் உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகளை இந்திய அணி இப்போதே தொடங்கிவிட்ட நிலையில், ரோஹித் சர்மாவின் இந்தத் திடீர் சொதப்பல் ஆட்டம் மற்றும் மைதானத்தில் நடந்த அந்தப் பரபரப்பான சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.