மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த இனிப்புக்கடை உரிமையாளர் தேபாஷிஷ் கோஷ், கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லயோனல் மெஸ்ஸியின் உருவத்தை இனிப்பால் தத்ரூபமாகச் செதுக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கோவா, கீர், மற்றும் பலவிதமான சாக்லேட் வகைகளைப் பயன்படுத்தி, மெஸ்ஸியின் ஜெர்சி எண் 10 உடன் அவர் உருவாக்கியுள்ள இந்த இனிப்புச் சிலை, மெஸ்ஸியின் மீதான அவரது அளவற்ற அன்பைப் பறைசாற்றுகிறது.
தத்ரூபமான வடிவமைப்பைக் கொண்ட இந்த இனிப்புச் சிலை, அந்தப் பகுதி மக்களையும், தீவிர கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
விளையாட்டு வீரர்களின் மீதான அன்பை வினோதமான முறையில் வெளிப்படுத்தும் இத்தகைய செயல்கள், சமூக வலைதளங்களில் அவ்வப்போது பேசுபொருளாகி வரும் நிலையில், இந்த இனிப்பு மெஸ்ஸி தற்போது வைரலாகி வருகிறார்.
