சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மருத்துவ உதவி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
விழாவின் சிறப்பம்சமாக, பணி நியமனம் பெற்ற மருத்துவர்களுடன் முதலமைச்சர் விஜய் மிகவும் கலகலப்பாகப் பழகினார். அவர்களது செல்போனைத் தானே வாங்கி, மிகுந்த உற்சாகத்துடன் அனைவருடனும் இணைந்து ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டார்.
முதலமைச்சரின் இந்த எளிமையான மற்றும் நெகிழ்ச்சியான செயல் அங்கிருந்த மருத்துவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தங்களுக்குக் கிடைத்த அரசுப் பணி நியமன ஆணைகளுடன், முதலமைச்சருடன் எடுத்துக்கொண்ட இந்த மறக்க முடியாத செல்ஃபி புகைப்படமும் கிடைத்துள்ளது என்று அவர்கள் உற்சாகத்துடன் நெகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
அதிகாரத் தோரணை இன்றி, பொதுமக்களோடும் அரசு ஊழியர்களோடும் இப்படி முதலமைச்சர் நெருக்கம் காட்டுவது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.
