குஜராத் மாநிலம் சூரத்தின் லிம்பாயத் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானப் பணியில் இருக்கும் வீட்டின் முதல் மாடி பால்கனியில் இருந்து தாயும் அவரது சிறிய மகளும் எதிர்பாராதவிதமாக கீழே விழும் நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விபத்தில், முதலில் சிறுமி கீழே விழ, அடுத்த சில நொடிகளில் அவளது தாயும் கீழே விழுகிறார். கீழே விழுந்த அதிர்ச்சியில் தாய் அசையாமல் கிடக்க, அந்த நிலையிலும் தைரியத்துடன் எழுந்து நின்ற அந்த பச்சிளம் குழந்தை, பயந்து ஓடாமல் மெதுவாக நடந்து தன் தாயின் அருகில் சென்று அவரை எழுப்ப முயற்சிக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
यह वीडियो काफी भयावह है
सूरत के लिंबायत इलाके में एक मकान बन रहा था।
जहां पहली मंजिल की बालकनी में रेलिंग न होने के कारण मां और उसकी छोटी बेटी नीचे गिर गईं।पूरी घटना CCTV में कैद हो गई। वीडियो में पहले बच्ची और फिर मां नीचे गिरती दिखाई देती हैं।
हैरानी की बात यह रही कि… pic.twitter.com/D0Je1BfyHg
— Priyanka Kumari (@Priyank22916194) July 14, 2026
“>
விபத்தின் தீவிரத்தை அறியாத அந்த மழலையின் பாசமும், இக்கட்டான சூழலில் காட்டிய தைரியமும் பலரையும் நெகிழச் செய்துள்ளது. அதே வேளையில், கட்டுமானப் பணிகளில் இருக்கும் கட்டிடங்களில் போதுமான பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.
இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க, குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பால்கனி மற்றும் மொட்டை மாடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், தற்காலிக தடுப்புகளை அமைப்பது அவசியம் என்றும் சமூக வலைதளவாசிகள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
