ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரி ஸ்ரீஹரி என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் அதிரடி விசாரணையில் தற்போது மிக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. சொத்து தகராறு காரணமாக ஸ்ரீஹரியை அவரது சொந்த மைத்துனரே திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது. ஸ்ரீஹரியின் மைத்துனரான ஹரிகிருஷ்ணா என்பவர், தனது இரு கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளார்.
அதிகாரி ஸ்ரீஹரியை காரில் கடத்திய கும்பல், அவருக்கு வலுக்கட்டாயமாக விஷ ஊசி போட்டு கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். எனினும், இந்த கொடூர கொலைக்கு முக்கிய குற்றவாளி ஹரிகிருஷ்ணா தப்பியோடி தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர வலைவீசி தேடி வருகின்றனர்.
