டெல்லியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தனது பேருந்தில் ஏறிய சந்தேகத்திற்கிடமான திருடர்களை அடையாளம் கண்டு, பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்தில் சந்தேகத்திற்குரிய நபர்கள் ஏறியிருப்பதைக் கவனித்த ஓட்டுநர், பொது அறிவிப்பு கருவியைப் பயன்படுத்தி பயணிகளைத் தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு எச்சரித்தார்.
View this post on Instagram
இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த நபர்கள், பேருந்தை விட்டு கீழே இறங்கினர். வெளியே வந்த அவர்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், அவர் எதற்கும் அஞ்சாமல் “திருடுவதை நிறுத்துங்கள்” என்று பதிலடி கொடுத்தார்.
இந்த ஓட்டுநரின் துணிச்சலைப் பாராட்டிய நெட்டிசன்கள், மற்ற ஓட்டுநர்களும் இதேபோல விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சிலர் அந்த நபர்களைப் பேருந்து ஓட்டுநர் நேராக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும், பயணிகள் அவருக்கு ஆதரவாகப் பேசியிருக்கலாம் என்றும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர்கள் காட்டும் அக்கறையைப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
