பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு மோதல்கள் மற்றும் கிளர்ச்சிகள், அந்நாட்டு ராணுவத் தலைமையின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 105 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலுச் மற்றும் டிடிபி போராளிகளின் தாக்குதல்களால், வெறும் மூன்று நாட்களிலேயே சுமார் 50 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழலில், ராணுவ தளபதி ஆசிம் முனீர் பலூசிஸ்தானைச் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், முன்னாள் ரா ஏஜென்ட் லக்கி பிஷ்ட், இது 1971-ல் ஜெனரல் நியாஸி மேற்கொண்ட தோல்வி மனப்பான்மை கொண்ட நடவடிக்கைகளை ஒத்திருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆசிம் முனீர் குவெட்டாவில் செய்தியாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தபோதே, சுமார் 30 காவல்துறை மற்றும் எஃப்சி (FC) வீரர்கள் தங்கள் பணியைத் துறந்து வீடு திரும்பியது,

பாகிஸ்தான் ராணுவத்தில் நிலவும் அதிருப்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பலூச் போராளிகள் மாகாண எல்லைகளை மூடிவிட்டதால், அங்கிருந்து வரும் மின்சாரம், நிலக்கரி மற்றும் எல்பிஜி எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது;

இதனால் பஞ்சாப் மாகாணத்தின் தொழில்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டு எதிரியை விட, பலூசிஸ்தானின் தற்போதைய நிலை பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.