அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அந்நியர்களின் வார்த்தைகள், பல நேரங்களில் பெரிய புத்தகங்கள் சொல்லாத பாடங்களை நமக்குக் கற்றுத்தருகின்றன என்பதற்குச் சான்றாக ஒரு ஆட்டோ ஓட்டுநரின் அறிவுரை இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராதிகா பஜாஜ் என்ற பயணி, தனது தொழில்முறை வேலைப்பளு காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தபோது, அவரிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒரு எளிமையான மற்றும் ஆழமான உண்மையைச் சொன்னார்.
Yesterday Autowala bhaiya asked me why I looked tense.
Told him career stress.He laughed and said: “Didi, meter bhi chalta hai aur zindagi bhi – dono mein rukna nahi hota, bas dhyaan rakhna hota hai kaha rukna hai.”
Paid him double. Some gyaan you can’t get in a TED talk.
— Radhika Bajaj (@radhika_bajaj) July 13, 2026
“மீட்டர் ஓடிக்கொண்டே இருப்பது போல வாழ்க்கையும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்; எங்கே நிற்க வேண்டும் என்பது தெரிந்தால் மட்டும் போதும்” என்று அவர் கூறிய அறிவுரை, அந்தப் பயணிக்கு பெரும் ஆறுதலை அளித்தது.
இந்தச் சம்பவத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ராதிகா, டெக் பேச்சுகளிலும் கிடைக்காத ஞானம் இது என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த உணர்ச்சிகரமான பதிவைக் கண்டு வியந்த நெட்டிசன்கள், வாழ்க்கை பாடங்கள் எதிர்பாராத இடங்களிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கல்வி மற்றும் புத்தகங்களுக்கு அப்பால், அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கிடைக்கும் இத்தகைய பாடங்களே உண்மையானவை என்பதை இந்தச் சம்பவம் உரக்கச் சொல்கிறது.
