பெங்களூரைச் சேர்ந்த அமேசான் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், தனது தாயை முதன்முறையாகத் தான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியுள்ளார்.

இதுகுறித்த நெகிழ்ச்சியான பதிவை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையில் பெற்ற எந்தவொரு பெரிய வெற்றியை விடவும், இந்த தருணம் தன் வாழ்நாளின் மிக முக்கியமான ஒரு மைல்கல் என்று அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளன.

“>

இந்த பதிவைக் கண்ட இணையவாசிகள் தங்களது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். தாய்க்கும் மகளுக்கும் இடையே இருக்கும் இந்த அழகான பிணைப்பைப் பாராட்டிய பல நெட்டிசன்கள், “இது நெஞ்சை உருக்கும் தருணம்” என்றும், “ஒவ்வொரு மகளும் தனது பெற்றோரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு கனவு தருணம் இது” என்றும் பதிவிட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.