பெங்களூரு நம்ம மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு, சக பயணியான ஒரு நபர் பாலியல் ரீதியாக அநாகரிகமான முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு பயணித்த அந்தப் பெண், தனது அருகில் அமர்ந்திருந்த 46 வயது மதிக்கத்தக்க நபர் தொடர்ந்து தன் மீது உரசி, தவறான முறையில் தொட முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், உடனடியாக அந்த நபரை எதிர்கொண்டு ரயிலுக்குள்ளேயே கன்னத்தில் அறைந்துள்ளார்.

“>

பின்னர் அந்த நபர் மதுபோதையில் இருந்ததும், மெட்ரோ அதிகாரிகள் முன்னிலையில் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு, தனது குமுறலையும் காவல் துறையின் மெத்தனப் போக்கையும் பகிர்ந்துள்ளார்.

இதனால் அந்த நபர் தன் மகளின் வயதுடையவர் என்று கூறி மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய விரும்பவில்லை என்றும், ஆனால் இதுபோன்ற செயல்களை அவர் மீண்டும் செய்யாதவாறு கடுமையான எச்சரிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். காவல்துறை இந்த விவகாரத்தில் முறையான வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியதாகப் பெண் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் அதனை மறுத்துள்ளனர்.