வாழ்க்கை சில நேரங்களில் வறுமையின் சாட்டையால் நம்மை மிகக் கொடூரமாக அடிக்கத் தொடங்கும். ஆனால், அந்த வலிகளைத் தாங்கிக் கொண்டு, விதியின் முகத்தில் அறையும் விதமாகச் சில மனிதக் கடவுள்கள் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.

அப்படித்தான், தன் அன்றாடப் பிழைப்பிற்காகவும், தன் பிள்ளையின் எதிர்காலத்திற்காகவும் அந்தச் சிறிய உணவுக் கடையின் அடுப்புப் புகைக்கு நடுவே, தினமும் வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய். ஆனால், எதிர்பாராத விதமாகக் கொடூரமான நோய் ஒன்று அவளைத் தாக்க, அந்தத் தாய் படுக்கையில் வீழ்கிறாள். கடை மூடப்பட்டால் அன்றைய பசிக்கு வழி இல்லை, அம்மாவின் மருந்துச் செலவுக்குப் பணம் இல்லை என்ற இக்கட்டான சூழ்நிலை. ஒரு நிமிடம் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் எதிர்காலமும் இருண்டு, அந்த வீடே உறைந்து போய் நிற்கிறது.

ஆனால், பள்ளிப் புத்தகங்களைச் சுமக்க வேண்டிய அந்தப் பிஞ்சு கைகள், தன் தாயின் கண்ணீரைக் துடைப்பதற்காக அந்தச் சிறிய கடையின் கரண்டியைக் கையில் எடுக்கின்றன. சமையல் அறையின் உஷ்ணமும், சுளீரெனத் தாக்கும் அடுப்புத் தீயும் அந்தச் சிறுவனுக்குப் புதியது தான்.‌ இருந்தாலும், “என் அம்மா படும் வேதனையை விட இந்தத் தீயின் உஷ்ணம் பெரியதல்ல” என்ற அசாத்திய மனவலிமையோடு, அந்தச் சிறுவன் சமைக்கத் தொடங்குகிறான்.

“>

அதிகாலையிலேயே எழுந்து கடைகளைத் திறப்பது, வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு உபசரிப்பது, சமைத்து முடித்துக் கடையை நடத்துவது என ஒரு முதிர்ந்த மனிதனைப் போல அந்தச் சிறுவன் கடையைச் சுமக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.