இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், சவுத்தாம்ப்டனில் நடைபெறும் ஐந்தாவது டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஜோஃப்ரா ஆர்ச்சரின் 145 கி.மீ வேக பவுன்சர்களில் சிக்கி 3 இன்னிங்ஸ்களில் 42 ரன்கள் மட்டுமே எடுத்த வைபவ் நீக்கப்பட்டது குறித்துபேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “வீரர்கள் களத்தில் அழுதுகொண்டிருக்காமல் 100% உழைப்பையும் வலிமையான மனநிலையையும் காட்ட வேண்டும்; எதிர்கால நலனுக்காகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன” எனக் கூறியுள்ள சர்ச்சை ரசிகர்களிடையே உள்ளது.
🚨 CONTROVERSIAL STATEMENT BY SHREYAS IYER JUST READ LAST LINE ON VAIBHAV SURYAVANSHI 🚨
Shreyas Iyer said 🗣️,
“I want them to give 100% effort. I just want them to have a solid mindset, where they go out there and give their best rather than sulking.
(Team news) Two changes.… pic.twitter.com/vSWhJNfjtu— Cricket Central (@CricketCentrl) July 11, 2026
“>
விராட் கோலி போன்ற ஜாம்பவான்களே இங்கிலாந்தில் திணறிய நிலையில், கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் கூறியபடி அயர்லாந்து தொடரிலேயே வைபவிற்கு வாய்ப்பளித்துத் தயார்படுத்தப்படாமல், ஒட்டுமொத்தத்தோல்விப் பழக்கத்தையும் சமூக ஊடக அழுத்தத்திற்காகவும் 15 வயது சிறுவன் மீது சுமத்தி நீக்கியது அவமரியாதை என்றும், இது அவரது நம்பிக்கையை உலுக்கியிருக்கிறது என்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் வல்லுநர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
