பொதுவாக குரங்கைக் கண்டாலே பலரும் அச்சப்பட்டு விலகிச் செல்வார்கள், ஆனால் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது குளிர்பானத்தை விடாமல் இருக்க குரங்குடன் போராடிய வீடியோ இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் தனது குளிர்பான பாட்டிலைக் குடித்துக்கொண்டிருந்தபோது, அதைத் தட்டிப் பறிக்க வந்த குரங்குடன் அவர் கடுமையாக மோதியுள்ளார். பாட்டிலை விடாமல் அவர் பிடித்துக் கொண்டதால், கோபமடைந்த குரங்கு அவரைத் தட்டிவிட்டு, முடியைப் பிடித்து இழுத்தும் அந்தப் பெண்ணை மிரட்டியது.

ஆனாலும் அந்தப் பெண் பாட்டிலைக் கொடுக்காமல் விடாப்பிடியாக இருந்தார். சிறிது நேரத்தில் குரங்கு அங்கிருந்து விலகிச் சென்றதால், அந்தப் பெண் பாட்டிலைக் காப்பாற்றிவிட்டதாக நினைத்து நிம்மதியுடன் நடக்கத் தொடங்கினார்.

ஆனால், உண்மையான வேடிக்கையே அதன் பிறகுதான் நடந்தது. அந்தப் பெண் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துச் சிறிது தூரம் நடந்தவுடன், பின்தொடர்ந்து வந்த குரங்கு மின்னல் வேகத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்து, எதிர்பாராத நேரத்தில் பாட்டிலைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியது.

 

View this post on Instagram

 

A post shared by Reality Sphere (@reality.sphere)

“>

நான் இவ்வளவு நேரம் போராடிய பாட்டில், குரங்கின் கைக்குச் சென்றதைப் பார்த்து அந்தப் பெண் திகைத்து நிற்க, இந்த வீடியோவை ரசிக்கும் நெட்டிசன்கள் குரங்கின் இந்த ‘மாஸ்டர் ஸ்டிரோக்’ செயலைப் பாராட்டி வருகின்றனர். “மங்கி பாய்” என அந்த குரங்கை செல்லமாக அழைக்கும் பலரும், இறுதியில் குரங்கின் தந்திரமான புத்திசாலித்தனத்தைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.