ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், நீண்ட பாரம்பரிய முக்காடு அணிந்த பெண் ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டு, அவர்களைத் தங்கு தடையின்றி சரளமாக ஆங்கிலத்தில் பேசி கண்டிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முகத்திரைக்குப் பின்னால் நின்று கொண்டு பொதுமக்களின் உரிமைகளுக்காக அதிரடியாகக் குரல் கொடுத்த அந்தப் பெண் சாதாரண ஒரு குடிமக்கள் அல்ல, அவர் ஒரு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ராஜஸ்தான் முன்னாள் உள்துறை இணை அமைச்சராக இருந்து மறைந்த கஜேந்திர சிங் ஷக்தாவத்தின் மனைவியுமான பிரீத்தி கஜேந்திர சிங் ஷக்தாவத் அவர்கள் அதிகாரிகள் பொதுமக்களைத் தேவையின்றி அலைய வைத்து துன்புறுத்துவதைக் கண்டு கடும் கோபமடைந்த பிரீத்தி ஷக்தாவத், நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
उदयपुर जिले की भिंडर नगर पालिका से एक अनोखा वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है. इस वीडियो में लंबा घूंघट निकाले एक महिला नगर पालिका के अधिकारियों की क्लास लगाती नजर आ रही है. घूंघट की ओट से यह महिला बेहद ही फर्राटेदार और अंग्रेजी में अधिकारियों को जनता की समस्याएं समझा रही है. pic.twitter.com/QGefmQA5lI
— जागृति_दुबे (@Jagriti_dubey13) July 9, 2026
“>
ஒரு புறம் ராஜஸ்தானின் பாரம்பரிய முக்காட்டின் கண்ணியத்தையும், மறுபுறம் ஒரு பெண் தலைவரின் உயர் கல்வியையும் உறுதியான நடத்துவதை வெளிப்படுத்தும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் தற்போது இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
